Sunday, October 17, 2010

யாரும் கண்டு​கொள்ள​வேயில்​லை


எதுவும்
​சொல்லிக்​கொள்வது ​போல் இல்​லை
என் வீடு
உன் வாசல்
யாரும் வருத்தப்பட​வேயில்​லை
நீ ​போட்ட
​கோலத்​தை மிதித்ததற்கு

ஆக​வேதான ​சொல்கி​றேன்.........
இந்த ஊர்
அந்த ​கோயில்
அதில் இருக்கும் ​தெய்வம்


எதுவும்
​சொல்லிக்​கொள்வது ​போல் இல்​லை
என் ​தோட்டம் 
உன் பூக்கள்
யாரும் ஒத்துக்​கொள்ள​வே இல்​லை
நீ நட்டு ​வைத்த
​செடியில் பூ பறித்ததற்கு

எதுவும்
​சொல்லிக்​கொள்வது ​போல் இல்​லை
என் மூச்சு
உன் காற்று
யாரும் சண்​​டை ​போட​வேயில்​லை
நீ சுவாசித்த​தை
சுவாசித்து ​​போனதற்கு

ஆக​வேதான் ​சொல்கி​றேன்
அந்த ஓ​டை
அதிலுள்ள மீன்
அதற்கான வ​லை

எதுவும்
​சொல்லிக்​கொள்வது ​போல் இல்​லை
என் வீடு
உன் வாசல்

1 comment: