எதுவும்
சொல்லிக்கொள்வது போல் இல்லை
என் வீடு
உன் வாசல்
யாரும் வருத்தப்படவேயில்லை
நீ போட்ட
கோலத்தை மிதித்ததற்கு
ஆகவேதான சொல்கிறேன்.........
இந்த ஊர்
அந்த கோயில்
அதில் இருக்கும் தெய்வம்
எதுவும்
சொல்லிக்கொள்வது போல் இல்லை
என் தோட்டம்
உன் பூக்கள்
யாரும் ஒத்துக்கொள்ளவே இல்லை
நீ நட்டு வைத்த
செடியில் பூ பறித்ததற்கு
எதுவும்
சொல்லிக்கொள்வது போல் இல்லை
என் மூச்சு
உன் காற்று
யாரும் சண்டை போடவேயில்லை
நீ சுவாசித்ததை
சுவாசித்து போனதற்கு
ஆகவேதான் சொல்கிறேன்
அந்த ஓடை
அதிலுள்ள மீன்
அதற்கான வலை
எதுவும்
சொல்லிக்கொள்வது போல் இல்லை
என் வீடு
உன் வாசல்

mounanama neram
ReplyDeletemadhi mayangi mayangi thavikkum
edharkku dont worry